
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்து வகை பணியாளர்களையும் பணியிட மாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்ட கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணிகள் தொடர்பான தகவல்களை ஜூலை 5ஆம் தேதிக்குள் பள்ளி கல்வித்துறைக்கு அனுப்ப அரசு செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.