
மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வந்தவர் அபிஷேக் (20). இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் ஒரு தனியார் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வந்துள்ளார். இவர் ஜே.இ.இ தேர்வுக்கு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அபிஷேக் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சமீபத்தில் தனியார் பயிற்சி மையங்களில் பயின்று வரும் மாணவர்களின் தற்கொலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதேபோன்று அரியானா மாநிலத்திலும் கடந்த 24 மணி நேரத்திற்கு முன்பு நீரஜ் என்ற 19 வயது மாணவன் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து உள்ளார். அவரும் ஜே.இ.இ தேர்வுக்கு பயின்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அபிஷேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து மாணவர் பயின்று வந்த தனியார் தேர்வு மையத்தில் தொடர்ந்து விசாரணைகள் நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த 24 மணி நேரத்தில் இரண்டு தற்கொலை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியது.