
கேரளா மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் வடக்கு பரவூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பெயரில் அப்பகுதிக்கு சென்ற எர்ணாகுளம் காவல்துறையினர் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் சோதனை நடத்தி உள்ளனர். அதில் வங்காள தேசத்தை சேர்ந்த 27 பேர் உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி தங்கியிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்ற போர்வையில் தங்கி இருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 34 வங்காளதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.