பெங்களூருவில் முறையான அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து தள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஒரு பட்டியல் அதிகாரிகள் கையில் இருக்கும் நிலையில் அதில் முதலிடத்தை பிடித்து இருக்கும் கட்டிடம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வெறும் 250 சதுர அடியில் கட்டப்பட்ட ஐந்து மாடி கட்டிடம் தான் அது.

முறையான அங்கீகாரம் இல்லாமல் அந்த கட்டிடத்தை கட்டிய அதன் உரிமையாளர் அதனை இடிப்பதற்கும் ஒப்புக்கொண்டு உள்ளார். இந்த கட்டிடத்தின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் மேலும் பல மாடியில் கட்டி இருக்கலாமே என்று வேடிக்கையாகவும் சிலர் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.