
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர் கான். இவர் தற்போது சினிமாவிலிருந்து சிறிது காலம் ஓய்வு பெற்றதால் புதிய படங்களில் கமிட் ஆகாமல் இருக்கிறார். இந்நிலையில் தற்போது நடிகர் அமீர்கானின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த 1999 ஆம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் சர்பரோஸ் என்ற படம் வெளியானது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் 25 வருடங்களுக்கு பிறகு உருவாக இருப்பதாக நடிகர் அமீர்கான் அறிவித்துள்ளார். அதோடு இந்த படத்தில் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ஜான் மேத்யூ மாத்தன் பணிபுரிய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நடைபெற்று வருவதால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அமீர்கான் தெரிவித்துள்ளார்.