
பஞ்சாப் மாநிலத்தில் அனோக் மிட்டல் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் உள்ளூர் தலைவர் ஆவார். இவர் ஒரு தொழிலதிபராக இருக்கும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி லிப்சி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் அனோக் மிட்டலுக்கு ஒரு 25 வயது இளம் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த கள்ளக்காதல் விவகாரம் லிப்சிக்கு தெரிய வந்ததால் தன்னுடைய கணவரை கண்டித்துள்ளார். இதன் காரணமாக தன்னுடைய காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்து கட்ட அவர் முடிவு செய்தார். அதன்படி கடந்த சனிக்கிழமை தன்னுடைய மனைவியை இரவு விருந்துக்காக ஒரு ஹோட்டலுக்கு அவர் காரில் அழைத்துச் சென்றார். அவர்கள் இருவரும் சாப்பிட்டுவிட்டு காரில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது திடீரென அனோக் காரை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக சென்றார்.
அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து அனோக்கை தாக்கிய நிலையில் லிப்சியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் அனோக் மயக்கம் தெளிந்து எழுந்த நிலையில் நகைகள் மற்றும் கார் போன்றவைகள் காணாமல் போனதால் அவர் போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது தன்னுடைய மனைவியை கொலை செய்ய அனோக் கூலிப்படையை ஏவிய நிலையில் அவர்களுக்கு 2.5 லட்சம் ரூபாய் தருவதாக பேசி முன்பனமாக 50,000 ரூபாய் கொடுத்துள்ளார். மேலும் இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அனோக், அவருடைய காதலி, கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அந்த கூலிப்படையின் முக்கிய தலைவனான குர்பீரீத் சிங் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.