சென்னை மாவட்டத்தில் உள்ள நன்மங்கலம் ஏழுமலை தெருவில் ராம்ஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். ராம்ஜிக்கு ஹரிப்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 23 நாட்களுக்கு முன்பு ஹரி பிரியாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் பிரியா தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.

அப்போது திடீரென புரையேறியதால் குழந்தை மூச்சு திணறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியா உடனே தனது குழந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஹரிப்பிரியா கதறி அழுதார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.