தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக 22 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு முன்னதாகவே, தேவைப்படக்கூடிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று  தமிழக அரசு கூறியுள்ளது.