
தமிழக அரசு துறையில் குரூப் 2, 2A பிரிவில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று முதல் ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்துவதற்கு ஜூலை 19 கடைசி நாள். செப்டம்பர் 14ஆம் தேதி தேர்வு நடைபெறும் நிலையில் 2030 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.