
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு, நீதி கேட்டு பாஜக மகளிர் சார்பில் நீதி யாத்திரை இன்று நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, திமுக ஆட்சி ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை, சர்வாதிகார ஆட்சி தான் நடைபெறுகிறது. அவர்களுக்கு எதிராக யாராவது அவர்கள் குற்றத்தை கைநீட்டி காட்டினாலே அவர்களை கைது செய்வதும், வழக்கு பதிவு வந்து செய்வது மட்டும்தான் தமிழகத்தில் நடக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என்று திமுக அமைச்சர்கள் கூறினர். இதை யாரும் அரசியல் செய்யவில்லை, நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்கு தான் போராடுகின்றோம். மணிப்பூர் விவகாரத்தில் பாஜக குரல் கொடுக்கவில்லை என்று சீமான் கூறினார். மணிப்பூர் பிரச்சனையும் இதுவும் ஒன்று அல்ல. இந்த பேரணியில் பங்கேற்றுவதற்காக நாங்கள் கைது செய்யப்படுவோம், ஜனநாயக ரீதியாக தமிழகத்தில் எதுவும் நடக்கவில்லை, கைது செய்தால் செய்யட்டும் பார்த்துக் கொள்ளலாம்.
பாஜக மாநில தலைவரை மாற்றுவதற்காக வாய்ப்பு உள்ளதா என்பதில் யாரும் எந்த முடிவுக்கும் வர வேண்டாம். பாலியல் விவகாரத்திற்கு எதிராக தவெக தலைவர் விஜய் குரல் கொடுத்துள்ளார். இதை போன்று அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் குரல் கொடுத்தால் மட்டும் போதாது. அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள். தவெக-வுடன் கூட்டணி குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளார்.