சென்னையில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும். இதுதான் நம்முடைய இலக்கு என்பதால் 2026 நடைபெறும் தேர்தலில் 200 வெல்வோம் என்ற உறுதி மொழியுடன் தற்போதே திமுக கட்சிக்காக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்றார். எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில தினங்களாக ஒரு வாக்கு கணக்கை கூறிவரும் நிலையில் அது ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி போட்ட கணக்கை மிஞ்சுவதாக உள்ளது.

அதிமுகவினருக்கு கூட்டல் மற்றும் வகுத்தல் கணக்கு தெரியாது என்று நினைத்து இபிஎஸ் பொய் கணக்கு கூறுகிறார். அந்தப் பொய் கணக்கை அடிப்படை அறிவு உள்ள அதிமுகவினர் கண்டிப்பாக நம்ப மாட்டார்கள்.‌ பிரதமரை எதிர்த்து பேசும் துணிவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறதா.? டங்ஸ்டன் துறைமுக விவகாரம் மற்றும் அம்பேத்கருக்கு எதிராக பேசிய அமைச்ச ஆகியோருக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி பேசவில்லை. மேலும் இபிஎஸ் என்னதான் கத்தி கதறினாலும் தமிழக மக்களுக்கு அவர் செஞ்ச துரோகங்கள் மட்டும்தான் நினைவுக்கு வரும். எனவே அடுத்து வரும் தேர்தலில் கண்டிப்பாக திமுகவுக்கு தான் வெற்றி என்று உரக்க கூறினார்.