
தமிழ்நாட்டில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகும் நிலையில் தற்போதே பணிகளை தீவிர படுத்தியுள்ளனர். கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகளை கட்சிகள் தீவிர படுத்தியுள்ள நிலையில் புதிய உறுப்பினர்களை இணைத்தால் மாற்றுக் கட்சியில் உள்ள உறுப்பினர்களை இணைத்தல் போன்ற பணிகள் ஒருபுறம் நடக்க மற்றொருபுறம் 2026 தேர்தலில் வெற்றிக்கான வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் மக்கள் யாரை அதிகம் விரும்புகிறார்கள் என்பது குறித்து இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகளை அமைப்பு கருத்துக்கணிப்பு நடத்தியது.
அதன்படி பிப்ரவரி 5 முதல் ஜூன் 17ஆம் தேதி வரை 234 சட்டமன்ற தொகுதிகளில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன் முடிவில் 77.83 சதவீத ஆதரவுடன் முதல்வர் ஸ்டாலின் முதலிடத்தில் இருக்கிறார். அதன்பிறகு 73.33% ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி இரண்டாம் இடத்திலும், 67.99 சதவீத ஆதரவுடன் உதயநிதி ஸ்டாலின் மூன்றாவது இடத்திலும், 64.58% ஆதரவுடன் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நான்காவது இடத்திலும் இருக்கிறார்.
60.58% ஆதரவுடன் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். மேலும் 17.7 சதவீதம் பேர் திமுகவுக்கு வாக்களிப்போம் என்றும், 17.3% பேர் அதிமுகவுக்கு வாக்களிப்போம் என்றும், 12.20% பேருக்கு தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிப்போம் என்றும், 5 சதவீதம் பேர் பாஜகவுக்கு வாக்களிப்போம் என்றும் கூறியுள்ளனர்.