விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் பிரம்மாண்ட மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. விஜய் தனது கட்சி கொள்கைகள் அரசியல் முன்னோடிகள் பற்றி விளக்கமாக பேசினார். அவர் பேசும்போது திருவள்ளுவர் வழியில் நம் வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களாக பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை நம் அரசியல் வழிகாட்டியாக ஏற்று ஜாதி, மத, பாலின பாகுபாடுகள் இல்லாத சமத்துவ சமுதாய உண்டாக்க பொது சார்பற்ற சமூக நீதி கொள்கைகளை நம்ம தமிழக வெற்றி கழகத்தின் வழியா உங்களுக்காக உழைக்க நான் வரேன் என பேசினார்.

மேலும் நம்மள நம்ம செயல்பாட்டை நம்பி நம்மளோட சிலபேர் வரலாம் இல்லையா? அவர்களுக்கான அரசியல் சூழல் உருவாக்கலாம். அவங்களையும் அன்போடு அரவணைக்கனும். நம்மள நம்பி வர்றவங்களை அரவணைத்து தான் பழக்கம். நம்மள நம்பி நம்ம கூட வர்றவங்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும் என விஜய் கூறினார். சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவன் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என வலியுறுத்து இருந்தார். விஜயின் இந்த கருத்து கூட்டணிக்கான அச்சாணியாக தெரிகிறது. கொள்கை எதிரியாக பாஜகவையும், அரசியல் எதிரியாக திமுகவையும் குறிப்பிட்டு பேசினார். ஆனால் கூட்டணிக்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.