
தமிழகத்தில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கட்சிகள் இப்போதே தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது தமிழக முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக தலைமை கழகம் தேர்தல் பார்வையாளர்களின் நியமித்து உத்தரவிட்டுள்ளது. இவர்களின் தலைமையின் கீழ் வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்குதல் போன்ற பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூட்டணி கட்சி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைமை கழகம் அறிவுறுத்தியுள்ளது. ஒருவேளை மாவட்ட செயலாளர்கள் சரியாக செயல்படவில்லை என்றால் அவர்களின் கட்சி பதவி பறிக்கப்படும் என்று தலைமை எச்சரித்துள்ளது. மேலும் தேர்தல் பணிகளை சரியான முறையில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் அனைவரையும் அரவணைத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைமை கழகம் அறிவுறுத்தியுள்ளது.