தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் ஏற்கனவே பாஜக கூட்டணியில் உள்ள பாமக தொடர்ந்து கூட்டணியில் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக அன்புமணி ராமதாஸிடம் கேட்டபோது அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார். அதாவது பாஜகவுடன் நீங்கள் கூட்டணியில் இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு அதுபற்றி தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

இதற்கிடையில் பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது ஏற்பட்ட நிலையில் ராமதாஸ் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க கூடாது என்று சொன்னதாகவும் அன்புமணி கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதுவே கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதால் தற்போது கூட்டணி பற்றி முடிவெடுக்காமல் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பாமக திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் அதனை மறுத்துவிட்டார். இதன் காரணமாக பாமக கட்சியை அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்வதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

தமிழக வெற்றி கழகம் டிசம்பர் மாதத்தில் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் என்று தகவல் வெளியான நிலையில் அதிமுக தற்போதே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் இணையும் என்று கூறப்படுகிறது. அதாவது கூட்டணி அமைக்கும் என்று கூறப்படும் நிலையில் பாமக கட்சியையும் கூட்டணிக்குள் கொண்டு வர விஜய் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

மேலும் பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவர அதாவது மாம்பழ சின்னத்தை கூட்டணிக்குள் கொண்டுவர இரட்டை இலை சின்னத்திற்கும் வாகை பூ அதாவது நடிகர் விஜய்க்கும் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.