நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பேசும்போது கடந்த 2021 ஆம் ஆண்டு பல இடங்களில் திமுக 300 மற்றும் 400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியினர் 15 ஆயிரம் வாக்குகள் வரை பெற்றிருந்த நிலையில் அடுத்து வரும் தேர்தலில் இப்படி நடக்காது என்று கூறினார். இதன் மூலம்அதிமுகவுடன் கூட்டணி அமைக்க சீமான் முடிவு செய்துள்ளதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. முன்னதாக விஜயுடன் சீமான் கூட்டணி வைப்பதாக கூறப்பட்ட நிலையில் விஜய் கட்சி தொடங்கிய போது சீமானுக்கு வேண்டிய மரியாதையை கொடுக்காததால் அவர் கோபத்தில் விஜய்யை விமர்சிக்க தொடங்கினார்.

முதலில் விஜயை வரவேற்ற சீமான் அவருடைய முதல் மாநாட்டிற்கு பிறகு சரமாரியாக விமர்சிக்க தொடங்கியதால் கண்டிப்பாக விஜய் மற்றும் சீமானின் கூட்டணி சாத்தியமில்லை என கூறப்படுகிறது. நடிகர் விஜய் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் இழுக்க திட்டமிட்ட நிலையில் நடிகர்கள் பின்னால் செல்ல மாட்டேன் என்று திருமாவளவன் திட்டவட்டமாக கூறிவிட்டார். இந்த நிலையில் சீமான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் அதிகாரம் மட்டும் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்று சீமானுக்கு வருத்தமிருக்கிறதாம்.

இதன் காரணமாக அதிமுக உடன் கூட்டணி அமைத்து சட்டசபை செல்ல சீமான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சீமான் எப்போதுமே தனித்து தான் போட்டியிடுவோம் என்று கூறிவரும் நிலையில் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்கும் நிலையில் ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிருப்தியில் இருக்கும் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி மாற வாய்ப்புள்ளது. இந்த நிலையில் அதிமுகவுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைத்தால் அது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தேர்தலை பொறுத்து தான் தெரியவரும்.

மேலும் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைத்தால் அது விஜய்க்கு சிக்கலை உண்டாக்கலாம் என்று கூறப்படுகிறது ‌. ஏனெனில் சீமான் பின்னால் ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். இதனை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூட கூறும் நிலையில் இந்த விவகாரத்தை சிறிதாக எடுக்கக் கூடாது என்று கூட பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை என்பதால் 2026 தேர்தலில் யார் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பது கண்டிப்பாக மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவும் பரபரப்பாகவும் இருக்கும்.