2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேமுதிக கட்சி தனது அரசியல் கூட்டணியைப் பற்றிய முடிவை இன்னும் எடுக்கவில்லை என அதன் தலைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், இப்போது எந்தவொரு கூட்டணியையும் குறித்து முடிவு செய்வது சரியான  நடவடிக்கையாக இருக்காது எனவும், தேமுதிக நிதானமாக சிந்தித்து நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி தருமபுரியில் நடைபெற உள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள், ஏற்பாடுகள், மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும், அதனைத் தொடர்ந்து அரசியல் ரீதியாக தெளிவான நிலைப்பாடு எடுக்கப்படும் என பிரேமலதா கூறினார். இதன்மூலம், தேமுதிக 2026 தேர்தலுக்கான தன்னுடைய திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.