
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026 ஆம் வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட தலைவர் இல்ல விழா ஒன்றில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “நம்முடைய தளபதி அவர்கள் 5000, 10,000 கோடிகளை விட்டுவிட்டு மக்களுக்காக சேவை செய்ய வருகிறார். 2026ஆம் வருடம் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தளபதியை நாம் தமிழ்நாட்டின் முதல்வராக அமர வைக்க வேண்டும் என்று கூறிய நிலையில், புஸ்ஸி ஆனந்த பேச்சால் பூரித்து போன நிர்வாகிகள், விசில் அடித்து அமர்க்களம் செய்தனர்.