2023 ஆம் ஆண்டு முடிவடைந்து 2024 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. அனைவரும் புத்தாண்டை நோக்கி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் குழந்தைகளுக்கு புத்தாண்டில் பறித்து மட்டும் கொடுத்து மகிழ்விக்காமல் பெற்றோர்கள் அவர்களிடம் தீர்மானம் எடுக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள். அவர்களுடைய வாழ்வில் லட்சியங்களை வகுக்கவும் நேர்மறையான பழக்க வழக்கங்களை பழக்கமும் இது உதவியாக இருக்கும். அதன்படி வயதுக்கு தகுந்தது போல குழந்தைகளுக்கு என்னென்ன தீர்மானங்கள் எடுக்கலாம் போன்ற யோசனைகளை இதில் பார்க்கலாம்.

நல்ல சுகாதார பழக்கம்:

ஆரோக்கியம் மற்றும் பலம் நல்ல சுகாதாரத்தின் மூலமாக. தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும் , கழிவறையை பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும், தும்மல் மற்றும் இருமல் ஆகியவை ஏற்படும் போது உங்களுடைய வாயை நன்றாக மூடிக் கொள்ள வேண்டும் போன்ற தீர்மானங்களை எடுக்கலாம்.

கல்வி சார்ந்த விஷயங்கள்:

கல்வி சார்ந்த இலக்குகளை குழந்தைகள் நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆனால் பெற்றோர்கள் இது தொடர்பாக அவர்களுக்கு எந்த ஒரு அழுத்தத்தையும் கொடுக்கக் கூடாது. கல்வியில் முன்னேறுவது மற்றும் அதிக மதிப்பெண்கள் எடுப்பது ஆகியவை கல்வி சார்ந்த இலக்குகள்.

புதிய ஹாபி:

குழந்தைகள் புதிய ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ள தங்களுக்கு பிடித்த புதிய ஹாபியை வளர்க்க வேண்டும். ஒரு புதிய கருவியை வாசிக்க கற்றுக் கொள்ளலாம். ஒரு குழுவில் சேர்ந்து இயங்கலாம் இல்லை என்றால் ஏதாவது ஒரு கலையை கற்றுக் கொள்ளலாம். இல்லையென்றால் விளையாட்டில் இணையலாம்.

திரை நேர கட்டுப்பாடு:

உங்களுடைய குழந்தை டிவி பார்க்கும் நேரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வெளியே சென்று விளையாடுவது மற்றும் திரை நேரம் ஆகிய இரண்டும் எப்போதும் சம அளவில் இருக்க வேண்டும். அதற்கான கட்டுப்பாடுகளை எடுக்கலாம்.

நன்றி உணர்வு:

நன்றி என்ற உணர்வு தனம் நம்மை அன்பானவர் ஆக்குகிறது. எனவே உங்களுடைய குழந்தைகளுக்கு நன்றி உணர்வை கற்றுக் கொடுங்கள். அவர்கள் எதற்கெல்லாம் நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் தினமும் எழுத வைத்து பழக்குங்கள்.

அடிப்படை வீட்டு வேலைகள்:

குழந்தைகளுக்கு அடிப்படை வீட்டு வேலைகள் மற்றும் வீட்டு மேலாண்மை ஆகியவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும். அதாவது அவர்கள் பாதுகாப்பாக பொருளை அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி அவர்களின் படுக்கை சுத்தம் செய்தல் மற்றும் செல்ல பிராணிகளுக்கு உணவு என அவர்களின் வேலைகளையும் வீட்டு வேலைகளையும் கற்றுத் தர வேண்டும்.

புதிய திறன்:

ஒவ்வொரு நாளும் கட்டாயம் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வதை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். அதனைப் போலவே விளையாட்டு அல்லது இசைக்கருவி வாசிப்பதை புதிதாக குழந்தைகள் தொடங்கலாம்.

பகிரும் பழக்கம்:

குழந்தைகள் தங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என உடன்பிறந்தவர்கள் என அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளும் பழக்க வழக்கத்தை நாம் கற்றுத் தர வேண்டும். அதாவது தங்களிடம் உள்ள விளையாட்டுப் பொருட்களை பகிர்ந்து கொள்வது முதல் மற்றவற்றையும் பகிர்ந்து கொள்வதை ஊக்குவிக்க வேண்டும்.

உணர்வுகள்:

சில குழந்தைகள் கூச்ச சுபாவம் உடையவர்களாக இருப்பதால் தங்களின் உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்த மாட்டார்கள். எனவே பெற்றோர்கள் அவர்களை தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும் அவர்களின் உணர்வுகளை வார்த்தைகள், எழுத்து மற்றும் ஓவியம் என ஏதாவது ஒன்றின் மூலமாக வெளிப்படுத்தவும் உதவி செய்ய வேண்டும்.