மத்திய இடைநிலை கல்வி வாரியம் 2024 ஆம் ஆண்டுக்கான CBSE பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் இன்று முதல் cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். எக்காரணம் கொண்டும் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் ஆய்வக பயிற்சி சம்பந்தப்பட்ட பாடத்திட்டங்களை மாணவர்கள் தேர்வு செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கடந்த ஆண்டில் பெறப்பட்ட அசல் மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ்களை எந்த விண்ணப்பம் பூர்த்தி செய்தலின் போது மாணவர்கள் சமர்ப்பிக்க தேவையில்லை என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.