கர்நாடக மாநிலம் பாகல்கோட் பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக். இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானதில் அபிஷேக் 600 மதிப்பெண்ணுக்கு 200 மதிப்பெண்கள் எடுத்து அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்தார்.

பிள்ளைகள் தோல்வி அடைந்தால் பெற்றோர் திட்டுவார்கள் அல்லது அடிப்பார்கள். ஆனால் அபிஷேக்கின் பெற்றோர் குடும்பத்துடன் கேக் வெட்டி இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.

இது குறித்து அபிஷேக்கின் பெற்றோர் கூறியதாவது, எங்கள் மகன் தேர்வில் தோல்வடைந்து இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் தோல்வி அடையவில்லை. அவன் மீண்டும் முயற்சி செய்து அடுத்த முறை வெற்றி பெறலாம் என மகிழ்ச்சியோடு கூடியுள்ளனர்.

இதுகுறித்து அபிஷேக் கூறியதாவது, நான் தோல்வியடைந்தாலும் என் குடும்பத்தினர் என்னை ஊக்கப்படுத்தி உள்ளனர். நான் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வாழ்க்கையில் வெற்றி பெறுவேன் என கூறியுள்ளார்.