
விருதுநகரில் சிமெண்ட் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையின் வளாக குடியிருப்பு பகுதியில் பாலமுருகன், ராமச்சந்திரன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அந்த நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் விடுமுறைக்கு வெளியூருக்கு சென்றிருந்தார்கள்.
இதை அறிந்த கொள்ளையர்கள் கடந்த 13ஆம் தேதி பாலமுருகன், ராமச்சந்திரன் ஆகியோர் வீட்டில் இருந்த 200 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்துள்ளனர். மேலும் இந்த வளாகத்தில் சம்பவத்தன்று தமிழக ஆளுநர் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.