
தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தன்னுடைய 47 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிலையில் பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் அதற்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டதோடு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் தனக்கான பிறந்தநாள் பரிசையும் கேட்டுள்ளார்.
அதாவது, நீங்கள் என்னுடைய பிறந்தநாளுக்கு அளிக்கும் பரிசுகளில் நான் மிகப்பெரியதாக கருதுவது எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் வெல்ல வேண்டும் என்ற நம் தலைவர் அவர்களின் லட்சியத்தை நிறைவேற்றி அந்த மாபெரும் வெற்றியை நாம் அனைவரும் நம் கழகத் தலைவரின் கரங்களில் கொண்டு சேர்ப்பது தான். மேலும் இரண்டாவது முறையாக நாம் தலைவரை அரியணை ஏற்றிடவும் ஏழாவது முறையாக நாம் கழகம் ஆட்சியை அமைத்திடவும் அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிறந்த நாளில் உங்கள் அனைவரின் வாழ்த்து மழையிலும் நனைந்தோம். வாழ்த்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் அன்பும், நன்றியும். #2026ல்_இலக்கு200 எனும் லட்சியப் பயணத்தை நோக்கி வீறுநடை போடுவோம்! pic.twitter.com/D5rdM8jqhd
— Udhay (@Udhaystalin) November 27, 2024