தேனியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தியுள்ள திட்டங்களால் இன்னும் 40 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி தான் தொடரும். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பானது தான். ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. இது அந்த இயக்கமே இல்லாமல் போய்விட்டதற்கு சமம் தான்.

இனி வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் கூட அதிமுக இருக்குமா? இருக்காதா என்பது சந்தேகமாக தான் உள்ளது. பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கொடுத்து அதனால் திமுக ஒன்றும் வெற்றி பெறவில்லை. மக்கள் வாக்களித்ததால் தான் திமுக அபார வெற்றி பெற்றது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஆனால் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி வாகை சூட வாய்ப்புள்ளது. சினிமா வேறு அரசியல் வேறு என்று மக்கள் பிரித்துப் பார்க்கின்றனர். இதனால் வெற்றி பெறக்கூடிய அளவுக்கு விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு ஓட்டுக்கள் கிடையாது என்று விஜய்யை தாக்கி பெரியசாமி பேசியுள்ளார்.