
பிரான்ஸ் நாட்டில் லாரன்ஸ் வான் வாசென்ஹோவ் என்பவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 1993ஆம் ஆண்டு ஒரு டெலிகாம் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு அந்த நிறுவனத்தை ஆரஞ்சு நிறுவனம் கையகப்படுத்தியது. இவருடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு அந்த நிறுவனம் அதற்கு ஏற்றார் போன்று வேலை வழங்கிய நிலையில், கடந்த 2002 ஆம் ஆண்டு வரை வேலை செய்தார்.
அதன் பிறகு அந்தப் பெண் தன்னை வேறொரு இடத்திற்கு மாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அவருக்கு புதிய சூழலில் வேலை இல்லாததால் அவருக்கு வேலை கொடுக்க அந்த நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் முழு சம்பளத்தையும் மாதமாதம் ஆரஞ்சு நிறுவனம் அவருக்கு வழங்கியுள்ளது. இருப்பினும் அவருக்கு எந்த வேலையும் வழங்கவில்லை. தொடர்ந்து 20 வருடங்களாக அந்த பெண்ணுக்கு வேலை எதுவும் கொடுக்காமல் சம்பளம் மட்டும் வழங்கியதால் தான் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் முடங்கிப் போனதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் தற்போது பாதிக்கப்பட்ட பெண் அந்நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.