
குஜராத் மாநிலத்தில் ராம் போர்ச்சா என்ற 75 வயது முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதாப் என்று 52 வயது இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஜெயா என்ற மனைவியும் ஜெய்தீப் என்ற மகனும் இருக்கிறார்கள். அதன் பிறகு ராம் போர்ச்சா வேறொரு வீட்டில் வசித்தார். இருப்பினும் இவருக்கு பிரதாப் வீட்டில் இருந்து தான் சாப்பாடு சென்றது. இதில் ராம் போர்சாவின் மனைவி கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். அதன் பிறகு தனியாக வசித்து வரும் ராம் தற்போது இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். ஆனால் இதற்கு பிரதாப் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததோடு திருமண வயதில் பேரனை வைத்துக்கொண்டு நீங்கள் திருமணம் செய்தால் அது குடும்பத்தினருக்கு அவமானம் என்று கூறியுள்ளனர்.
இதனால் கோபம் அடைந்த ராம் தன்னுடைய மகனை கடந்த ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி மற்றும் மகன் அந்த அறையை பூட்டி விட்டு வெளியே தப்பி ஓடினர். இது சார்பாக காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் ராமை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் என்னுடைய மகனை கொலை செய்ததற்காக நான் வருத்தப்படவில்லை. என்னை பல நாட்களாக அவன் துன்புறுத்தி வந்தான் என்று ஆதங்கத்தோடு கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.