
திருச்சி மாவட்டம் கொன்னைக்குடி கிராமத்தை சேர்ந்த இயேசுராஜ்(50) என்பவர் ஜோசப் என்பவரின் டிபன் கடையில் சாப்பிட்டு விட்டு 20 ரூபாய் கடன் வைத்துள்ளார். இதனை ஜோசப் கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் விறகு கட்டையால் இயேசுராஜை அடித்த ஜோசப் கொலை செய்துள்ளார். உயிரிழந்தவரின் குடும்பம் இந்த சம்பவத்தால் பேரதிர்ச்சியில் உள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளியை தேடி வருகிறார்கள்.