கடந்த 2002-ம் ஆண்டில் சலபதி ராவ் என்பவர் எஸ்.பி.ஐ பேங்கில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவர் வேலை செய்த அதே பேங்கில் பல போலியான ஆவணங்களை அடகு வைத்து  50 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த மோசடியை விசாரித்த சிபிஐ கடந்த 2004 ஆம் ஆண்டு 2 குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தது.

அதன் பிறகு சலபதி ராவ் தலைமறைவாகியுள்ளார். இதைத்தொடர்ந்து அவரது மனைவி காவல் நிலையத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு தனது கணவரை 7 வருடங்களாக காணவில்லை. எனவே அவர் இறந்து விட்டதாக அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார்.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில்  சலபதி ராவ் இறந்து விட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும் இந்த வழக்கை விடாது சிபிஐ தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், அவர் 2007- ம் ஆண்டு சேலத்திற்கு தப்பிச் சென்றது தெரிய வந்தது.

பின் அவரது பெயரை வினித் குமார் என்று மாற்றிக் கொண்டதோடு, அந்த பெயரில் ஆதார் கார்டையும் பெற்றுள்ளார். பின் வேறு ஒரு திருமணமும் செய்து கொண்டுள்ளார். ஆனாலும் அவர் முதல் மனைவி மற்றும் மகனுடன் தொடர்பில் இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் 2-வது மனைவி மூலம் தெரிந்து கொண்டனர்.

இதுபோன்று இவர் பல இடங்களுக்கு தப்பிச்சென்று பல லட்சம் ரூபாயும் மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. இதற்கிடையில் அவுரங்கபாத்தில் உள்ள ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கு அவர் தனது பெயரை சுவாமி விதிதாத்மானந்த் தீர்த்தர் மாற்றியுள்ளார். பின் அந்த பெயரில் ஆதார் கார்டையும் வாங்கியுள்ளார். அந்த ஆசிரமத்திலும் 70 லட்சம் மோசடி செய்துள்ளார்.

இதையடுத்து கடைசியாக நேற்று  திருநெல்வேலியில் இருந்து இலங்கைக்கு செல்ல முயன்றார். இதனை அறிந்த சிபிஐ அதிகாரிகள் திருநெல்வேலியில் உள்ள நரசிங்க நல்லூர் கிராமத்தில் வைத்து அவரை மடக்கி பிடித்து  கைது செய்தனர்.