சென்னையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்-தனச்செல்வி (60) தம்பதியினர் காரில் தூத்துக்குடிக்கு சென்றுள்ளனர். இந்த காரை கார்த்திக் (22) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவர்கள் மதுரை மாவட்டம் மேலூர் அருகே தாமரைப்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே தனச்செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதன்பிறகு கார்த்திக் மற்றும் கோபாலகிருஷ்ணன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.