கரூர் மாவட்டத்திலுள்ள துளசிகொடும்பை பகுதியில் ராமசாமி- தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் விமலா(17) அரசு பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட விமலா பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று வழக்கம் போல வயிற்று வலி அதிகரித்ததால் மன உளைச்சலில் விமலா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்த உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு விமலாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.