
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் மேற்பார்வையில் கடந்த மே 10ஆம் தேதி அன்று மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மீகா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் லூர்து சேவியர் மற்றும் பிற காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் பகுதி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை நிறுத்தி சோதனை செய்வதில் அவரிடமிருந்து 2.100 கிலோகிராம் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.
அதன் பின் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மடத்தூர் துறைக்கனிநகரை சேர்ந்த ரவிக்குமார் (52) என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து அவரிடம் இருந்த கஞ்சா, ரூபாய் 1200 பணம், 1 செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அதன் பின் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.