
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள IIITDM கல்லூரியில் இடம்பெற்ற மோசமான நிகழ்வு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கல்லூரியில் B.Tech (CSC) இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லூரி விடுதியில் உள்ள மற்ற பெண் மாணவர்களின் நிர்வாண வீடியோக்களை ரகசியமாக எடுத்து, டெல்லியில் வசிக்கும் தனது காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது தன்னை ரகசியமாக வீடியோ எடுக்கப்படுவதை உணர்ந்தார். பின்னர் அந்த மாணவி உடனடியாக வெளியே வந்து மற்ற மாணவர்களிடம் அதைப் பற்றி கூறிய நிலையில் அந்த வீடியோ எடுக்கப்பட்ட சாதனத்தை கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வீடியோ எடுத்த மாணவியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதோடு இந்த வீடியோவை சமூக வலைதளங்களிலும் வெளியிடப்படலாம் என்று மாணவிகள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளதால் உடனடியாக இது பற்றி உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட மாணவியை கைது செய்ததோடு அவரிடம் இருந்தால் செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணையில் நடைபெறும் நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் மத்தியில் பெரும் அச்சம் எழுந்துள்ளது.