கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்ற 24 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு 19 வயது பெண்ணை கடந்த இரண்டரை வருடங்களாக காதலித்து வந்தார்.

இந்நிலையில் பாலகிருஷ்ணன் அந்த இளம்பெண்ணிடம் திருமண ஆசை காட்டி அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதில் இளம்பெண் கர்பமாகவே அவர் பாலகிருஷ்ணனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் பாலகிருஷ்ணன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததோடு அவருடைய தந்தை கொளஞ்சி மற்றும் தாயார் காமாட்சி ஆகியோரும் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதன் காரணமாக இளம்பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி போலீசார் 3 பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.