
தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம் பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தமிழ்செல்வி உயிரிழந்தார்.
இந்த நிலையில் தமிழ்ச்செல்வி பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்கு பிரபாகரன் சங்கரப்பேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பம் 2 மணி நிராகரிக்கப்பட்டது.
இது தொடர்பாக பிரபாகரன் அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது கிராம நிர்வாக அலுவலரான கணேசமூர்த்தி என்பவர் 3000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இது குறித்த பிரபாகரன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பிரபாகரன் கணேசமூர்த்தியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரபாகரனை அதிரடியாக கைது செய்தனர்.