
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 14-ஆம் தேதி உடல் முழுவதும் எரிந்த நிலையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. சடலமாக மீட்கப்பட்ட பெண் மதுரையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்த மாரியம்மாள் என்பது தெரியவந்தது. மாரியம்மாளுக்கு பெற்றோர் இல்லை.
அவர் ஆசிரமத்தில் தான் வளர்ந்துள்ளார். இந்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன் என்பவருடன் மாரியம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் ஒரு கடையில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக மாரியம்மாள் பிரவீனுடன் தங்கி இருந்தார். இதனால் இரண்டு முறை கர்ப்பமானார். இப்போது பிரவீன் குழந்தை வேண்டாம் என கூறியதால் மாரியம்மாள் கருக்கலைப்பு செய்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாரியம்மன் தொடர்ந்து வற்புறுத்தியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பிரவீன் அமைதி சோலை பகுதிக்கு மாரியம்மாளை அழைத்து சென்றுள்ளார்.
போகும் போதே வண்டியில் இருந்து மாரியம்மாளை தள்ளி விட்டதால் அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிர் பிரிந்தது. இதனால் பதற்றமடைந்த பிரவீன் போலீசிடமிருந்து தப்பிப்பதற்காக மாரியம்மாள் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.
போலீசார் பிரவீனை கைது செய்து விசாரணை நடத்திய போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை நீதிமன்றத்தில் அதிகப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.