பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ வெளியாகிய பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவி ஒருவர் SUV காரினை ஓட்டி வந்தார். அவர் ஓட்டி வந்த கார் மோதியதில் சாலையில் நடந்த சென்று கொண்டிருந்த தந்தை மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர் கடைகளுக்கு பேப்பர் விற்பனை செய்யும் இம்ரான் ஆரிப் என்பவர் ஆவார். இவரும் அவருடைய மகளான ஆம்னா என்பவரும் சாலையில் நடந்து சென்ற நிலையில் இருவரும் சம்பவ இடத்திலேயே விபத்தில் இறந்தனர்.

அதோடு விபத்தில் 3 வேர் படுகாயம் அடைந்தனர். அந்த விபத்தில் நடந்த பின் அங்கு பொதுமக்கள் சூழ்ந்தனர். அப்போது காரை விட்டு இறங்கிய அந்தப் பெண்மணி இரண்டு பேரை கொன்று விட்டோமே என்ற குற்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் இருந்தார். அதோட காவல்துறையினர் கைது செய்யும் வேலையில் கேமராவை பார்த்து வில்லத்தனமாக அவர் சிரித்தார். இந்த வீடியோ அப்போதே சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த விபத்தை ஏற்படுத்திய பெண்ணின் பெயர் நடாஷா டானிஷ். அவர் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இது தொடர்பான வழக்கு நேற்று ‌ முன்தினம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் மன ரீதியான பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் என்றும் இது தொடர்பாக கடந்த 25ஆம் ஆண்டு முதல் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதியின் முன்பு நடாஷாவின் குடும்பத்தினரும் உயிரிழந்த தந்தை மகளின் குடும்பத்தினரும் வந்தனர். அவர்கள் நடாஷாவுக்கு மனரீதியான பிரச்சனை இருப்பதாக கூறியதால் உயிரிழந்த தந்தை மகளின் குடும்பத்தினர் அவருக்கு மன்னிப்பு வழங்கினார்.

இதன் காரணமாக நடாஷாவுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஆனால் சமூக வலைதளத்தில் தொழிலதிபரின் குடும்பத்தினரிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டுதான் மன்னித்து விட்டு விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. மேலும் பாகிஸ்தானில் உள்ள ஒரு சட்டத்தின் படி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கி விட்டால் அவர்கள் விடுதலை ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.