ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை ஒரு லட்சம் வாக்கு வெற்றியடைய செய்துவிட்டால் மாதம் தோறும் உங்கள் தொகுதிக்கு வந்து குறைகளை நானே கேட்டறிந்து பூர்த்தி செய்வேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை மக்கள் துரத்தி துரத்தி அடிக்கிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி 4 நாட்களுக்கு முன்பாக மீசையை பற்றி பேசினார். கடந்த 2017-ஆம் ஆண்டு தலைமைச் செயலகத்தில் சோதனை நடைபெற்ற போது அந்த மீசை என்ன செய்தது. தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்ற போதும், வடநாட்டில் கொலை நடந்த போது அந்த மீசை என்ன செய்தது. அந்த மீசை அப்போது என்ன செய்து கொண்டிருந்தது என்பது எங்களுக்கு தெரியும். அதாவது அந்த மீசை இரண்டு பெண்மணிகளுக்கு ஷூ பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தது. நான் இன்னும் பேச ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள். மேலும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்தவைகளில் படிப்படியாக நிறைவேற்றபட்டு வருகிறது. மீதமுள்ள வாக்குறுதிகளும் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.