காஞ்சிபுரம் மாவட்டம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வேதம். இந்த தம்பதியினருக்கு ஜெயந்தி(28) என்ற மகள் உள்ளார். ஜெயந்திக்கு திருமணமாகி சக்திவேல்(6) என்ற மகனும், பியூலா(4) என்ற மகளும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயந்தி தனது இரண்டு பிள்ளைகளுடன் காணாமல் போய்விட்டார்.

இதுகுறித்து வேதம் பொன்னேரிகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இளம்பெண்ணெயும், அவரது இரண்டு பிள்ளைகளையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.