அசாம் மாநிலத்தில் உள்ள கச்சார் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு குடும்பத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது 30 வயது பெண் தனது பக்கத்து வீட்டுக்காரர்களை சரமாரியாக திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த 28 வயது நபர் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தார். அப்போது இரண்டு குழந்தைகளும் வீட்டில் இருந்தனர். உடனே அந்த பெண் அவரை வெளியே செல்லுமாறு கூறினார். ஆனால் வாலிபர் அந்த பெண்ணின் கை, கால்களை கட்டி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் பெண்ணின் மீது ஆசிட்டை ஊற்றியுள்ளார். இதனை பார்த்ததும் செய்வதறியாது குழந்தைகள் கதறி அழுதனர். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அந்த பெண்ணின் கணவர் தனது மனைவியின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான நபரை தேடி வருகின்றனர்.