ஆந்திரா உட்பட ஐந்து மாநிலங்களில் இரண்டு காவல்துறை ஐ.ஜி.க்கள், எட்டு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 12 எஸ்.பி.களை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் மூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்த அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை முறையாக பின்பற்றாத மாநிலங்களில் அரசு அதிகாரிகளை தேர்தல் ஆணையமே பணியிட மாற்றம் செய்துள்ளது.