
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 1983இல் சர்க்காரியா கமிஷன் அன்றைக்கு மத்திய அரசுக்கு அறிக்கை கொடுக்கிறது. ஒரு மாநிலத்தில் ஒரு முதலமைச்சருக்கும், ஆளுநருக்கு உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அந்த அறிக்கையில் நிறைய கருத்துக்கள் சொல்லி இருக்கிறார்கள்.
நான் கேட்கிற ஒரே கேள்வி…. இப்ப வாய் திறந்து கத்துகிறீர்கள்…. 17 வருடம் மத்தியில் சோலையாக இருந்தீர்கள்…. அப்ப ஏன் நீங்கள் அது குறித்து வாய் திறக்கவில்லை? 17 வருடம் அன்னைக்கு ஆட்சியில் மத்தியில் இருந்த போது… உங்களின் ஆதரவோடு ஆட்சி நடந்த போது,
சர்க்காரியா பைண்டிங் கொடுத்திருக்கிறார். அதை நீங்கள் நடைமுறை படுத்துங்கள் என அப்பவே செய்திருந்தால், இன்று ஒரு மாநிலத்தின் முதல்வருக்கும், கவர்னருக்கும் நல்ல ரிலேஷன்ஷிப் இருந்து இருக்குமே… அதை விட்டுவிட்டு இப்ப ஆளுநர் தேவை இல்லை…. ஆளுநர் தேவையில்லை…. எங்கள் ஆட்சி கலைப்பதற்கு மட்டும் பணியும், சட்டையும் கிழித்துக்கொண்டு ஆளுநர் கிட்ட நின்று ஆட்சியை கலைத்திடுங்கள் என்று சொல்ல முடியும்.
அப்போ ஆளுநர் தேவை. நான் சொல்ற மாதிரி… இது இப்ப இல்லை…. அவுங்க அப்பா காலத்திலும் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களை பெரிய அளவிற்கு ஏமாற்றி, அதன் மூலம் பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி ஏமாற்றுவது. அது மட்டுமில்லாமல் முரண்பாடு… நேற்று எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நிலை, இன்று ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது ஒரு நிலை…. ஒரு நிலை இன்றைக்கு எடுக்கின்றது என்று சொன்னால், இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும் என தெரிவித்தார்.