காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ(32). இவர் அப்பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த உதயா(19) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி மது குடிப்பதற்கு 2000 ரூபாய் பணம் வேண்டும் என இளங்கோவிடம் கேட்டுள்ளார். அதற்கு இளங்கோ மறுப்பு தெரிவித்தார்.

இதனால் உதயா கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்த 1000 ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து இளங்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் உதயாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உதயா ஏற்கனவே சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.