ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் நேற்று டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வதேரா 70 ரன்கள் வரை எடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக துருவ் ஜூரேல் 50 ரன்கள் வரை எடுத்திருந்தார். இதனால் பஞ்சாப் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானனை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 3-ம் இடத்திற்கு முன்னேறிய நிலையில் பிளே ஆப் சுற்றிற்கும் தொகுதி பெற்றுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு பிறகு அந்த அணி பிளே ஆப் கைப்பற்றியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்ரேயஸ் ஐயர் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றிக்குள் நுழைந்ததன் மூலம் அசத்தலான சாதனையை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளை பிளே ஆப் சுற்றுக்குள் அழைத்துச் சென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதாவது கடந்த 2019 முதல் 2020 ஆம் ஆண்டு வரை டெல்லி அணியில் விளையாடிய போது கேப்டனாக இருந்த ஸ்ரேயஸ் ஐயர் அந்த அணியை பிளே ஆப் சுற்றுக்குள் அழைத்து சென்றார். அதன் பிறகு கடந்த 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தபோது அந்த அணியை பிளே ஆப் சுற்றுக்குள் அழைத்து சென்றதோடு கோப்பையையும் அந்த வருடம் வென்று கொடுத்தார்.

இதை தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் கொல்கத்தா அணி அவரை விடுவித்த நிலையில் பஞ்சாப் அணி அவரை எடுத்தது. மேலும் பஞ்சாப் அணி இந்த வருடம் பல வருடங்களுக்குப் பிறகு ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது 14 வருடங்களுக்கு பிறகு பஞ்சாப் அணியை அவர் பிளே ஆப் சுற்றுக்குள் அழைத்து சென்றுள்ளார். மேலும் இதனால் வெவ்வேறு போட்டிகளில் மூன்று அணிகளை பிளே ஆப் அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.