தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விமல். இவர் களவாணி, கலகலப்பு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விமல் மீது பைனான்சியரான கோபி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது நடிகர் விமல் நடிப்பில் மன்னர் வகையறா திரைப்படம் வெளியானது. தனது ஏ3 நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்காக நடிகர் விமல் பைனான்சியர் கோபி என்பவரிடம் ரூ‌ 3.06 கோடி கடனாக பெற்றுள்ளார்.

ஆனால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த பணத்தை அவர் திருப்பி செலுத்தவில்லை. இதன் காரணமாக கோபி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்‌. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் உடனடியாக பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என விமலுக்கு உத்தரவிட்டது. மேலும் அதன்படி 18 சதவீத வட்டி தொகைய ரூ‌.3‌.06 கோடியை கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.