குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் ராஜேந்திரா பர்மர் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவர் மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடம் சொல்லிக் கொடுக்கிறார். இந்த நிலையில் ராஜேந்திர பர்மா மாணவர்களை துஷ்பிரயோகம் செய்து அடித்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவர்கள் தலைமை ஆசிரியர் ஹிதேந்திர சிங்கிடம் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக கேட்டபோது தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த தலைமை ஆசிரியர் ராஜேந்திர பர்மாவை 18 முறை அறைந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.