சிவகங்கை மாவட்டம் இடையகாட்டூர் பகுதியில் அஜித்குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மில்லில் கடந்த 2 வருடங்களாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே மில்லில் வேலை செய்து வரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை அஜித்குமார் காதலித்து வந்தார். சமீபத்தில் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி யாருக்கும் தெரியாமல் அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்.

இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரிய வந்த நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அஜித் குமாரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, அஜித் குமார் சிறுமியை திருமணம் செய்த காரணத்திற்காக 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.