
தமிழில் மைனா என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர்தான் அமலாபால். அந்த படத்தின் வெற்றிக்கு பின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா ஆகியோர் படங்களிலும் நடித்தார். தமிழை தாண்டி ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல படங்களிலும் நடித்து வந்தார். இவர் இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து விவகாரத்தை பெற்றார், அதன் பிறகு ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவருடைய நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சிந்து சமவெளி.
இந்த படத்தில் மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே தவறான உறவு ஏற்படுவது போன்று கதை அமைக்கப்பட்டிருக்கும். இதனால் படம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில் 17 வயதில் இந்த படத்தில் நடித்ததால் பட்ட கஷ்டங்கள் குறித்து அவர் பேசியுள்ளார். அதில், “சிந்து சமவெளி படம் வெளிவந்த பிறகு பல துன்பங்களை சந்தித்தேன். என்னுடைய குடும்பம் அடைந்த மனவேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என்னைவிட அப்பாதான் மிகவும் வருத்தப்பட்டா.ர் இதனால் மைனா படத்தின் ப்ரோமோஷன் விழாவிற்கு கூட போக முடியாமல் தவித்தேன்” என்று கூறியுள்ளார்.