தமிழக வெற்றி கழகம் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தின் போது நடிகர் விஜய் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் இடையே மட்டும்தான் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டி என்று கூறினார். அதோடு திமுக அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த விஜய் பாஜகவையும் விளாசினார். இதற்கு திமுக மற்றும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது ஆர்.எஸ் பாரதியும் விஜய்க்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, திமுகவை கைப்பற்றி அதை செய்வேன் இதை செய்வேன் என்று கூறியவர்கள் எல்லோரும் காணாமல் போய்விட்டனர். 75 ஆண்டு காலத்தில் அனைத்து கட்சிகளையும் பார்த்து உயர்ந்த கட்சி. 17 மாசத்துக்கு முன்னாடி பிறந்த ஒரு குழந்தை தற்போது சவால் விடுகிறது. காலில் போடும் செருப்புக்கு சமமாக மிதித்து தூக்கி போட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் தமிழக வெற்றி கழகத்தை காலில் போடும் செருப்புக்கு சமம் என்று ஆர் எஸ் பாரதி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.