
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஒரு பிரைவேட் ப்ரெப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியையொருவர், தனது பள்ளியில் படிக்கும் 16 வயது சிறுவனுடன் பாலியல் உறவு வைத்ததாகக் கூறப்பட்டு, தற்போது குற்றவியல் வழக்கில் சிக்கியுள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
26 வயதான ஜொஸ்லின் சான்ரோமன் (Jocelyn Sanroman) எனப்படும் இந்த பெண் வாட்டர்ஃபோர்ட் டவுன்ஷிப்பில் உள்ள Oakside Prep Academy பள்ளியில் 2023ஆம் ஆண்டில் ஆசிரியையாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அந்த காலக்கட்டத்தில், 16 வயதான மாணவனுடன் அவர் பாலியல் உறவு வைத்ததாக ஆக்லாந்து மாவட்ட சட்டத்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான தகவலை ஒரு வேறு ஆசிரியரிடம் சான்ரோமனே நேரடியாக பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த ஆசிரியர், அந்த தகவலைக் கேட்டவுடன் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சம்பவம் உறுதி செய்யப்பட, சான்ரோமனுக்கு மூன்றாம் நிலை குற்றவியல் பாலியல் வழக்கின் கீழ் (Third-degree criminal sexual conduct) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சட்டத்துறை தெரிவித்துள்ளது.
ஆக்லாந்து கவுண்டியின் மாநில வழக்கறிஞர் கரென் மெக்டொனால்ட், இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே உள்ள நம்பிக்கையை முற்றிலும் துரோகிக்கிறது எனக் கூறினார். “ஒரு ஆசிரியர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மாணவனைச் சுரண்டியுள்ளார். இது கடும் குற்றம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்த மற்றொரு ஆசிரியரின் செயலை பாராட்டிய கரென் மெக்டொனால்ட், “அவரின் செயற்பாடு மற்ற மாணவர்கள் மீதான சுரண்டலுக்கு தடையாக அமைந்துள்ளது” எனக் கூறினார். தற்போது சான்ரோமனுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. மேலும் இவரது நடவடிக்கை மிச்சிகன் மாநிலத்தில் கல்வி துறையை கடுமையாக அதிர்ச்சியடைய செய்துள்ளது.