இந்தியாவில் நர்சிங் பட்டதாரிகள் தேவை அதிகமாக இருப்பதால் தற்போது புதிய நர்சிங் கல்லூரிகளை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி மருத்துவக் கல்லூரிகள் அருகே 1570 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 157 புதிய நர்சிங் கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இந்த தகவலை மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.